அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரின்_கிராம_சாலைகள்_மேம்பாட்டு_திட்டம் மூலம் , மேலும் 10,000 கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் – முதலமைச்சர் ஸ்டாலின்


ஊரகச் சாலைகள் என்பது கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான ரத்த நாளங்கள்! இதனை வலுப்படுத்த – மேம்படுத்த நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களின் தொடர்ச்சியாக இன்று ஒரு பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல்வரின்_கிராம_சாலைகள்_மேம்பாட்டு_திட்டம் மூலம் , மேலும் 10,000 கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்


AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு


முதலமைச்சர் அடக்குமுறையை கையாளுகிறார். அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.


100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெறாது என அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கள்ளச்சாராயத்திற்கு துணை போனவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் மயிலிறகால் தடவி வருகின்றனர் - ஆர்.பி.உதயகுமார்


முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இனியும் திமுக அரசு தொடர்ந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.


எதிர்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார்" -ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர்


"விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர் கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார்" -ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர்


கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை


கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா


தமிழ்நாடு பாஜகவில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா 2வது முறையாக கட்சியில் இருந்து கடந்த 20ம் தேதி நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து திருச்சி சூர்யா சிவா, பாஜக மீதும், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் சூர்யா சிவா இன்று காமெடி நடிகர் சந்தானத்தின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தற்போது அந்த ட்விட்டர் பதிவு அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.


கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை


இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், கடந்த வாரம் இதே போன்று விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது வெறும் புரளி என தெரியவந்தது. அது போல மீண்டும் இஸ்லாமிய அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் விமான நிலைய அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டதில், இது மீண்டும் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது எனினும் பாதுகாப்புக்காக காவல் துறையினர் பணியில் உள்ளதாக தெரிவித்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், இதே போன்று பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Keezhadi Excavation : 10ம் கட்ட அகழாய்வில் 27 பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டுள்ளது!


சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 10ம் கட்ட அகழாய்வில் 27 பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டுள்ளது!


தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole)மருந்துகள் கையிருப்பு உள்ளது : அமைச்சர் மா. சுப்பிரமணியன்


“தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole)மருந்துகள் கையிருப்பு உள்ளது; அது அல்சர் போன்ற வியாதிகளுக்கு தரப்படுகிறது; ஃபோமெபிசோல் (Fomepizole) 4 கோடி 42 லட்சம் மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது; மருந்துகள் கையிருப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் வெள்ளை அறிக்கை விடவேண்டும் என கூறியுள்ளார் அதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” - சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி