Illicit Liquor: கண்ணீரில் கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
kallakurichi illicit liquor: ஒருநபர் ஆணையம், ரூ.10 லட்சம் நிவாரணம் - விஷச்சாராய விவகாரத்தில் முதலமைச்சரின் அதிரடிகள்
kallakurichi illicit liquor: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்: இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
TVK Vijay On illicit liquor: கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
Kallakurichi: கள்ளச்சாராய மரணம்.. 3 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கும் அதிமுக - இபிஎஸ் நேரில் ஆறுதல்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசின் விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா வாகனங்களை இயக்க வேண்டும்; மீறினால் நடவடிக்கை - தேனி ஆட்சியர் எச்சரிக்கை
தேனி மாவட்டம் AITP சுற்றுலா வாகனங்கள் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும். மீறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம், 2030 காலிப்பணியிடங்கள்..!
TNPSC Group 2 Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.