கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்து 127 பேர் இதுவரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் பாதிப்பு...
இவற்றில் இதுவரை சிகிச்சை பலனின்றி 37 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது சிபிசிஐடி போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ள திட்டம் திட்டி உள்ளனர்.
தலைநகரில் கிடைத்த கள்ளச்சாராயம்
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் கிடைத்த கள்ளச்சாராயத்தால் இந்த உயிரிழப்பு நடைபெற்று இருப்பது, கள்ளச்சாராயத்தை கண்காணிப்பவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ், தாமோதரன் ஆகிய இரண்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போக மேலும் 10 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தனால் என்ற அரக்கன்...
தற்பொழுது உயிரிழப்பு ஏற்படுவதற்கு, கள்ளச்சாராயணத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது தான் காரணம் என கூறப்படுகிறது. மெத்தனாலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, கள்ளச்சாராயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் என்பது பொதுவாக அவற்றைக் காய்ச்சி குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள், இது போன்ற கலாச்சாராயத்தில் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும். மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் கலந்து விற்கப்படும் கள்ளச்சாராயம், சிறிய தப்பு நடந்தால் கூட அது விஷமாக மாறிவிடும் .
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி பாதிக்கப்படுபவர்களை குறித்து நாம் பார்க்க வேண்டியவை, எவ்வளவு சாராயம் குடிக்கிறார்கள், அவர்கள் குடிக்கும் விஷ சாராயத்தில் எவ்வளவு மெத்தனால் உள்ளது. பாதிப்பு அடைந்தவுடன் எவ்வளவு நேரத்தில் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
விஷம் சாராயம் குடித்து 30 நிமிடங்களில் மருத்துவமனை வந்து சேர்ந்தால் வயிற்றைக் கழுவி, காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதற்கு மேல் நேரம் செல்ல செல்ல, உடல் மெத்தனாலை புரிந்து கொள்ள துவக்கும் . கண் பாதிப்பு ஏற்படும், வயிற்று பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பதிப்பு, தொடர்ந்து அவர்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டவர்கள், டயாலிசிஸ் சிகிச்சையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரம்பத்தில் பாதிக்கும் உறுப்புகள் கண் மற்றும் சிறுநீரகம்தான்.
காப்பாற்றுவதற்கான வழிமுறைகள்
முதலில் உடலில் இருக்கும் மெத்தனாலை வெளியில் எடுப்பார்கள். அதற்கு சில மாற்று மருந்துகளும் இருக்கின்றன. மாற்று மருந்துகள் கொடுக்கப்படும், மருந்துகள் 100% பயன் தராது. இதனால்தான் எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்பது முக்கியமாகிறது. ரத்தத்தில் கலந்து விட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் நிறைய கிடையாது. அந்த இடத்தில் தான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விழிப்புணர்வுடன் இருந்து செயல்பட்டால் தான் பிரச்சனைகளை, தீர்க்க முடியும் என தெரிவிக்கின்றனர்.