Vikravandi : விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறார் அன்புமணி... சூடுபிடித்தது இடைதேர்தல்... வெற்றி யாருக்கு?


விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி. விக்ரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். விக்ரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.வேட்புமனு தாக்கல் நேற்று முதல் ஜூன் 14 தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். இந்த நிலையில் பாமக சார்பில் சி. அன்புமணி  போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.


"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்“ நீட் தேர்வை சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது.


அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஆ.ச.குமரி தலைமையில் இன்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். இந்தப் புகார் பெட்டியில் போடப்படும் புகார் கடிதங்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தான் திறக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். என்று மகளிர் ஆணைய தலைவர் பேசினார்.


திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்


திருப்பத்தூரில் நுழைந்த சிறுத்தை சேலத்தில் இருந்த சிறுத்தையா என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் கால் தடம் சேலத்தில் நடமாடும் சிறுத்தையின் கால் தடம் இல்லை என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நடமாடும் சிறுத்தை ஓசூர் மலைப்பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் எனவும், மேட்டூரில் நடமாடும் சிறுத்தை சத்தியமங்கலம் காடுகளில் இருந்து வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் சேலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடுவது உறுதியாகி உள்ளது.


ஒரு கிராமமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய முடிவு.. காரணம் என்ன?


பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாம்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 690- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சொந்த மண்ணில் அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என ஒட்டுமொத்த மக்கள் முடிவு எடுத்திருப்பதாக கூறுகின்றனர். எனவே ஆந்திர மாநிலத்தில் இடம் தஞ்சம் அடைய, போராட்டக் குழுவினர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.