நேரில் ஆறுதல்! ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதி!


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்த அவர், மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பொற்கொடியிடம், ‘’குற்றம் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


24 மணிநேரத்தில் இத்தனை க்ரைமா? - லிஸ்ட் போட்டு திமுக ஆட்சியை வறுத்தெடுத்த இபிஎஸ்!


தமிழ்நாட்டின் தலைநகரில் தனது வீட்டின் முன்னாலேயே ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


கடந்த 24 மணி நேரத்திற்குள் 2 படுகொலை சம்பவங்களும் ஒரு கொலை முயற்சியும் நடைபெற்றதாகவும், இனி மக்கள், நமக்கு நாமே பாதுகாப்பு என்றுதான் இருக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Sivakasi Accident: மீண்டுமா..! சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு


Sivakasi Accident: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் காயமடைந்த இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளையார் குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாரியப்பன் மற்றும் முருகன் எனும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 2 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றி தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Madurai: "20 கோடி கிடைக்கும்" - சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ரூ.18 லட்சம் மோசடி!


சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும், என  மதுரையை சேர்ந்த வியாபாரியிடம் 18லட்சம் ரூபாய் மோசடி - திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு.


விவசாயிகள் கடன்  கொடுப்பவர்களாக மாற வேண்டும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு


விவசாயிகள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும்.


தஞ்சாவூர்: விவசாயிகள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும். டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.


கல்லிடைக்குறிச்சியில் ட்ரெயின் நிக்காது - ‘ரைட் ரைட்’ குடுத்த பைலட்கள் சஸ்பெண்ட்


முன்பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளை பின்னால் வந்த ஈரோடு ரயில் மூலம் ஏற்றி ஒரு மணி நேரம் காத்திருந்து தென்காசி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது


Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் இதோ


மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,832 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,149 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,341 கன அடியாக அதிகரித்துள்ளது.