விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  Vikravandi bypoll விழுப்புரம் :


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த தம்பதி- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்


ஆசூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருமண நடந்து முடிந்த கையோடு வாக்களித்த மணப்பெண்.


விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆசூர் கிராமத்தை சேர்ந்த தேவகி என்ற பெண்னுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அன்பரசன் எம்பவருடன் இன்று காலை புதுச்சேரியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மணப்பெண் தேவகி கணவருடன், மணக்கோலத்தில் சென்று வாக்களித்தார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பரபரப்பு.. வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து


டி. கொசபாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக கனிமொழி என்கின்ற பெண் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரான ஏழுமலை கத்தியால் கழுத்தில் கீறி விட்டு தப்ப முயன்றார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரை மறைக்கப்பட்டு கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் காயமடைந்த கனிமொழி என்கின்ற பெண்ணை மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு அடுத்த இடி! 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!


நேற்று காலை கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்தினர். நீதிபதியிடம் இந்த வழக்கு சம்பந்தமாக சவுக்கு சங்கரை விசாரிக்க ஏழு நாள் கஸ்டடியை கேட்டு கரூர் போலீசார் கோரிக்கை வைத்தனர். போலீசாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி 4 நாள் மட்டும் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார்.


சுரங்க கால்வாயில் விழுந்த குட்டி யானை - தண்ணீரை நிறுத்தி உயிருடன் மீட்ட தமிழக அதிகாரிகள்


தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் யானை திறந்த வாய்க்கால் பகுதியில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஷட்டர் பகுதிக்கு முன்னால் உள்ள இந்த கிரில் கம்பிகளில் சிக்கிக்கொண்டது.மேலும் படிக்க..சுரங்க கால்வாயில் விழுந்த குட்டி யானை - தண்ணீரை நிறுத்தி உயிருடன் மீட்ட தமிழக அதிகாரிகள்


கொடைக்கானல் பூங்காக்களுக்கு போகும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு! கட்டணம் உயர்வு!


நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றிலிருந்து புதிய கட்டண முறையும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.