CM MK Stalin Speech: வினேஷ் போகத் போல தடைகளை உடைத்தெறியுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்


உத்வேக பேச்சு வினேஷ் போகத் தடைகளை உடைத்து அசாத்திய துணிச்சல் உள்ள பெண்ணாக நாம் எல்லோரும் பாராட்டும் வகையில் கொடி கட்டி பறந்து கொண்டுள்ளார்.


கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அந்த தடைகள் உடைத்தெறியப்பட வேண்டும். தடைகளை உடைக்க உதவி செய்ய நானும், திராவிட மாடல் அரசும் உள்ளது. வினேஷ் போகத் தடைகளை உடைத்து அசாத்திய துணிச்சல் உள்ள பெண்ணாக நாம் எல்லோரும் பாராட்டும் வகையில் கொடி கட்டி பறந்து கொண்டுள்ளார். தடைகள் என்பது உடைத்தெறிய தான். தடையை பார்த்து சோர்ந்து, முடங்கி விடக்கூடாது. நான் உங்களது மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களது வெற்றிக்கு பின்னால் திராவிட மாடல் அரசு இருக்கும்” எனத் தெரிவித்தார்.


Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Savukku Shankar: யூடிபூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்ததை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும், கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி, கோவை மற்றும் சென்னை என, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான சுமார் 18 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்தார்.


விழுப்புரத்தில் பதற்றம்... மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்த நிலையில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூறுகையில், விசாரணை கைதியின் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே முழு விவரம் வெளிவரும் என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tenkasi Leopard: தென்காசி அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வரும் சிறுத்தை ! பசுமாடுகளை கடித்து குதறியதால் பீதியில் மக்கள்..!


”சிறுத்தை தாக்கியதில் இரண்டு பசுமாடுகளில் ஒன்று உயிரிழப்பு, மற்றொரு பசுமாடு படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை- அச்சத்தில் விவசாயிகள்”


பாதி சம்பளம் வந்தாச்சு மீதி சம்பளம் எப்போது சார் தருவீங்க..? காத்திருக்கும் ஆசிரியர்கள்


ஜுலை மாதத்திற்கான சம்பள பாக்கி உடனடியாக வழங்க வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கடந்த ஜுலை மாதத்திற்குரிய சம்பள பாக்கி 2,500 ரூபாயை விரைவாக வழங்க வேண்டும் என அரசுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நெல்லையில் பயங்கரம்.. ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி.. ஆயுதங்களுடன் பள்ளியில் சிக்கிய 3 மாணவர்கள்.. 


மாணவர்களின் இது போன்ற சமூக விரோத செயல்களால் ஆசிரியர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளனர்..