Petrol Bomb Attack: "எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு" சேலத்தில் பரபரப்பு..!
எடப்பாடி காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி துவக்கப்பள்ளி, இ -சேவை மையம், நூல் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படும் இப்பகுதியில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள்கள் காவல் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது.
Coimbatore Mayor :கோவை மக்களுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள்? - புதிய மேயர் பதில்
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இன்று மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியின் சார்பில் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டிருந்தார். நூறு வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 கவுன்சிலர்கள் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். ஒருவர் எஸ்டிபிஐ, மற்ற மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி கூட்ட அரங்குக்கு வந்தனர். முன்னாள் மேயர் கல்பனா ஆனந்த குமாரும் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்தார். அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேர், இந்தத் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
ஆடி மாத திருவிழா.. மும்முனி பச்சையம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள மும்முனி கிராமத்தில், பச்சையம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம், மும்முனி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மும்முனி மன்னார்சாமி கோயில் (மும்முனி பச்சையம்மன் கோயில்) அமைந்துள்ளது. மும்முனி பச்சையம்மன் கோயில், பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு குலதெய்வமாக திகழ்ந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நிலவரம் என்ன? - இன்று காலை நீரின் அளவு எவ்வளவு குறைந்தது?
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியாக குறைந்துள்ளது.அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 5,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
'ஜீரோ இஸ் குட்' அப்படினா என்ன தெரியுமா ? - அட இது சூப்பரா இருக்கே...!
சென்னை முழுவதும் பல்வேறு சாலைகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் ஜீரோ இஸ் குட் ( Zero is Good ) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. "உலகில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களை காட்டிலும், சென்னை நகரை போக்குவரத்தில் சிறப்பாக மாற்றுவதற்காக 'ஜீரோ ஆக்சிடென்ட் டே' ( Zero accident day ) என்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது."ஜீரோ டே என்பது விபத்து மட்டும் ஜீரோ இல்லாமல், ஜீரோ விதிமீறல், ஜீரோ அபராதம் மற்றும் ஜீரோ சலான் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதுபோன்று அனைத்தும் ஜீரோவா ஆகும்பொழுது, சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறையில் கரப்ஷன் ஜீரோவாகும்" என தெரிவித்தார். இந்த ஜீரோ ஆக்சிடெண்ட் டே ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.” என்று காவல் துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”காவல் நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லை” எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு…!
தமிழ்நாட்டில் மக்கள் பாதுகாப்பை தேடிச் செல்லும் காவல்நிலையங்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும் "இதை விட மோசமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட முடியாது" என்றும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு முறையும் நினைப்பதற்குள் அதனினும் மோசமான ஒரு நிகழ்வு இந்த திமுக ஆட்சியில் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.