TN Headlines: ஒரு வாரத்திற்கு மழை..!"தவெக கொடி விவகாரம்- வழக்கறிஞர்களுடன் விஜய் ஆலோசனை: இதுவரை இன்று

Tamilnadu Headlines Today: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Continues below advertisement

TN Rains : தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழையா? எங்கெல்லாம் தெரியுமா? அறிவிப்பு இதோ..!

Continues below advertisement

ஜூன் ஜூலை மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவில் அவ்வப்போது மழையானது பெய்து வருகிறது. இதனால் இதமான சூழல் நிலவி வருவதால் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன ? குறிப்பாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வலுவான  தரைக்காற்று 30-40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல நாளையும்  தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வலுவான  தரைக்காற்று 30-40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை மறுநாளான 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாத விடுப்பில் சென்றார் அண்ணாமலை! தமிழக பாஜக-விற்கு இடைக்கால தலைவர் “நஹி நஹி?”

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் இருந்து குறைந்தது 2 தொகுதிகளாவது வென்றுவிட வேண்டும் என்ற கணக்கில் பாஜக பெரும் முயற்சி எடுத்தது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஃபெலோஷிப்புடன் கூடிய 3 மாத படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டதால், அவருக்குப் பதிலாக, அப் பொறுப்புகளை கவனிக்க இடைக்கால பொறுப்புத் தலைவர் அல்லது பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்ற தகவல், வெறும் தகவலாகவே இன்னமும் நீடிக்கிறது.

TVK Flag Issue : "தவெக கட்சி கொடி விவகாரம்" வழக்கறிஞர்களை வறுத்தெடுத்த நடிகர் விஜய்! 

தமிழக வெற்றி கழகம் கொடி சின்னம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த நடிகர் விஜய், அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், நான் அரசியல் கட்சி தொடஙகும் போது எந்த விதத்திலும் பிரச்னை வர கூடாது. அதிலும் சின்னம், கொடியில் பிரச்சனை வர கூடாது என தெரிவித்து இருந்தும், வழக்கறிஞர்களான நீங்கள் என்ன செய்துக்கொண்டுள்ளீர்கள். இது போன்ற பிரச்சனை வருவதற்கு காரணமே நீங்கள் தான் என கோபம் பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை நான் எடுப்பேன் என ஆவேசமாக வழக்கறிஞர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

MK Stalin US Visit : ”தமிழ்நாட்டின் 17 நாள் முதல்வர் யார்?” பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது..? "

முதல்வர் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் வரை உதயநிதி ஸ்டாலினே அனைத்து நிர்வாக பொறுப்புகளையும் கவனித்துக்கொள்ளவுள்ளார் என கூறப்படுகிறது”

முதல்வர் பட ஒருநாள் முதல்வர் மாதிரி முதல்வர் வெளிநாட்டில் இருக்கும் இந்த 17 நாட்களும் உதயநிதியே முதல்வராக செயல்படவுள்ளார் என்று திமுக தொண்டர்கள் பேசிவருகின்றனர். அவர் வரும் வரை ஆட்சியை எந்த பிரச்னையும் இன்றி அவர் சிறப்பாக நடத்திக்காட்டுவார் என்றும் முதல்வர் வந்த பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு தரப்படுவது உறுதி என்கிறது அறிவாலய வட்டாரம்.

Continues below advertisement