91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?
1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கில ஆட்சியில் சென்னை கர்ணலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி மேட்டூர் அணையைத் முதன் முறையாக திறந்து வைத்தார். தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை இன்று தனது 90 ஆண்டுகள் நிறைவு பெற்று 91வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மேட்டூர் அணையானது 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. மேலும் விரிவாக படிக்க..
தொடங்கியது தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! 1 லட்சம் பேருக்கு வேலை தரும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று புதிய திட்டங்களையும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.
Medical Counselling: தொடங்கிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு; நாளை 7.5% பிரிவுக்கு ஆரம்பம்
Medical Counselling 2024: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: 15 நாட்களில் விசாரணையை முடிக்க சிறப்பு புலனாய்வு குழு - முதலமைச்சர் அதிரடி
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கை விசாரிக்க பவானீஸ்வரி ஐ.பி.எஸ். தலைமையில் சிறப்பு விசாரணை புலனாய்வு குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி பாலியல் தொல்லை தந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
எம்பி கனிமொழியை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி ஜாமீனில் விடுவிப்பு
திமுக அமைச்சர்கள் மற்றும் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் குறித்து அவதூறு பேச்சுகளை பேசியதாக புகார் எழுந்தது. அதன் பேரில் திருச்சி காந்திசந்தை போலீஸார், அவர் மீது அவதூறுப்பேச்சு, ஆபாசமாக பேசுதல், மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து நேற்று அவரைக் கைது செய்தனர். திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது, அங்கு சுரேஷ்குப்தா மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரைப் போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதனை தொடர்ந்து நேற்று இரவு 11 மணி வரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள், வாதிட்டு பின்பு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.