முதலமைச்சரின் புதிய முதன்மை தனிச்செயலாளராக உமாநாத் நியமனம் - தலைமைச் செயலாளர் அதிரடி

Continues below advertisement


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்மை தனிச்செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் தனிச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். சிவ்தாஸ் மீனா விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாலும், அவர் ரியல் எஸ்டேட் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாலும் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சரின் புதிய தனிச்செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதன்மை தனிச்செயலாளராக இருப்பார். இவருக்கு அடுத்தபடியாக முதன்மைச் செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு தனிச்செயலாளராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே முதலமைச்சரின் தனிச்செயலாளராக பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருணாநிதிக்கு புகழ் சேர்க்க திமுக பாஜகவிடம் வாழ்நாள் அடிமையாக சாசனம் செய்து விட்டது - ஆர்.பி.உதயகுமார்


நாணய வெளியிட்டு விழா, மாநில விழா அல்ல மத்திய அரசு விழா தான் என்று முழு பூசணிக்காயை முதலமைச்சர் ஸ்டாலின் மறைக்க பார்க்கிறார்.


”பாஜகவோடு யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கும் கூட்டணியில் இருப்போம்” சிபிஎம் பாலகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பு..!


பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் சிபிஎம் கட்சி இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ள கருத்து அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதையும் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்ததையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளரே இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தூள்ளது அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது


Dindugal : "சாலை வசதி இல்லாத மலை கிராமம்” : பெண்ணை டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்..


8 நாட்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட 45வயது பெண்ணை டோலிகட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தூக்கி கொண்டு வந்து 108 ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம்.


கொடைக்கானலை ஒட்டியுள்ள சின்னூர் மலைக்கிராமத்தில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட 45வயது பெண்ணை டோலிகட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தூக்கி கொண்டு வந்து 108 ஆம்புலென்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம். உடல் நிலை பாதிக்கப்படும் நபர்களை அவசர கால தேவைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால்  டோலி கட்டி தூக்கி செல்லும்  உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிரமத்தில் உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரியில் எஸ்.ஐயை வெட்டிய ரவுடி” அதிரடியாக சுட்டு பிடித்த இன்ஸ்பெக்டர்..!


செல்வம் மீது குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 கொலை வழக்கு உட்பட 27 க்கு மேற்பட்ட வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.


மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,500 கன அடியாக குறைந்தது


கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16,500 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 12,500 கன அடியாக குறைந்துள்ளது.


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்