தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரையில் பேசியதாவது, “ நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். விடுதலையை பாடுபட்டு பெற்றுத்தந்த தியாகிகளை போற்றுவோம். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்போம். எந்த நோக்கத்திற்காக அவர்கள் போராடினார்களோ அதற்காக எந்நாளும் உழைப்போம் என்று உறுதியேற்போம்.


வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். நேதாஜியின் இ்ந்திய விடுதலை படையில் கரம் கோர்த்தவர்கள்தான் தமிழர்கள். 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


TN Rain: சில்லென்ற வானிலை! அடுத்த 3 நாட்கள் தமிழ்நாட்டில் இப்படித்தான் இருக்கப்போகுது!


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


சுதந்திர தினமான இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் கையில் காஞ்சி வங்கி வாங்கிய விருது..!


காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்டதால் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விருதினை வழங்கினார்.


பரந்தூர் : உச்சகட்ட கோபத்தில் கிராம மக்கள்..! அரசு தீண்டாமை பார்ப்பதாக குற்றச்சாட்டு..!


பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள்  மீண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் மே1 தொழிலாளர்கள் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் நடைபெற்ற 7 கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.