அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி


அதிமுக பாஜகவுக்கு அடிபணிந்து செல்கிறது என கூறும் திமுகவினர் ஏன் டெல்லியில் நிமிர்ந்து நின்று போராடி நிதியை வாங்கி தர முடியவில்ல என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குடும்ப அட்டை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும் என ராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


“ரொம்ப கஷ்டமா இருக்கு; ஜெயலலிதா இருந்திருந்தா இப்படி விட்டிருக்கமாட்டார்” - சசிகலா


ஆட்சியில் இருக்கும் திமுக நாள்தோறும் மக்களை கசக்கி பிழிந்துக் கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டு வேறு.  60 மாதத்தில் 40 மாதம் இந்த ஆட்சி கடந்துவிட்டது. இந்த காலத்தில்  என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. கல்லணை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கும் சூழலில் அந்த பள்ளிக்கு கழிப்பிட வசதி இல்லை என்கின்றனர். மாநகராட்சியை பொறுத்தவரை ஒரு மேயர் இப்பதான் போனார். அவர்களுக்குள் அடிதடி சண்டை தான் என்று இருந்தால் இவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்? ஒரு பணியும் நடக்கவில்லை. ”இருக்கும் குறைந்த நாட்களில் சொன்னதை மக்களுக்கு செய்யப்பாருங்கள், இல்லையெனில் 2026 இல் நாங்கள் வந்து மக்களை பார்த்துக் கொள்கிறோம்” என சசிகலா தெரிவித்தார்.


விழுப்புரம் : 3 டன் எடை கொண்ட தூக்கு தேர்... திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு... உயிர் தப்பிய பக்தர்கள் :


விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகேயுள்ள கடையம் கிராமத்தில் பழமைவாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்குதேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கண்டாச்சிபுரம் அருகே உள்ள கடையம் கிராமத்தில் 300 இளைஞர்கள் தூக்கி சென்ற தூக்கு தேரானது சரிந்து விழுந்ததில் தேரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.


Nilgiri Mountain Train: தொடர் விடுமுறை... நீலகிரிக்கு சிறப்பு மலை இரயில்கள் இயக்கம்


சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Special Bus: தொடர் விடுமுறை! இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் 


சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினமான நாளை வியாழக்கிழமை என்பதாலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகிறது.