என்ன கொடும சார்! இந்த காலத்திலும் இப்படியா? - மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்


திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அதனை தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்த நிலையில் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் நேரடியாக மூடப்படாத கால்வாயில் கலந்து சென்றது.கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க் கட்டி கழிவுகளை அதில் விடாமல் நேரடியாக கால்வாயில் விட்டு இருப்பதும், அதனை அள்ள எந்திரங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் மனித கழிவுகளை அகற்ற மனிதனைப் பயன்படுத்திய நிகழ்வு மனித நேயத்தை இழக்க செய்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் இந்த நிகழ்வுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்பியாக ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்பு


திருப்பத்தூரில் ஐந்தாவது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 


3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு... வெளுத்து வாங்கிய மழை... தத்தளிக்கும் விழுப்புரம் மாவட்டம்


மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். இப்பகுதியில் ஆண்டுதோறும் 25 லட்சம் டன்களுக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் இருந்து பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 


 இன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்ந்த திருவண்ணாமலை - உற்சாகத்தில் மக்கள்


திருவண்ணாமலை மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை நகராட்சியுடன் வேங்கிக்கால் உட்பட 16 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஊராட்சி மன்றம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ப்ளாஸ்டிக் டிபன் பாக்ஸ்.. தண்ணீர் பாட்டில் வேணாமே.. பள்ளிக்கல்வி இயக்ககம் அட்வைஸ் என்ன?


மாணவர்கள் 2024- 2025 கல்வியாண்டு முதல்‌ பள்ளி , கல்லூரி மாணவர்கள்‌ உபயோகிக்கும்‌ டிபன்‌ பாக்ஸ்‌, வாட்டர்‌ பாட்டில்‌ போன்றவற்றை பிளாஸ்டிக்கால்‌ பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. 


கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!


கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில்  பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது வனத்துறை.


மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு - மீண்டும் திறக்கப்பட்ட உபரிநீர்!


கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


திருச்செந்தூர் : சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி சுவாதி.. வெள்ளை யானை வீதி உலா கோலாகலம்..!


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளை யானை முன் செல்ல,  சுந்தர மூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி  வீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது.ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கயிலாய மலைக்கு வெள்ளை யானையை அனுப்பி 63  நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வந்ததாக வரலாறு உண்டு.


தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை ; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!


தமிழ்நாட்டில் அடுத்த 6 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.