TN Rains: 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை! :
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TN GOVT Age Limit: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முடிவு?
தமிழக அரசு விளக்கம் Tamil Nadu Govt Employees Retirement Age: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த இருப்பதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 19000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக உயர்வு
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 19000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக உயர்வு; காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து, வினாடிக்கு 19000கன அடியில் இருந்து 23,000 கன அடியாக உயர்வைத் தொடர்ந்து 28-வது நாளாக குளிக்க தடை.
ஸ்ரீ மஹா பஞ்சமி வாராஹி அம்மன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை..
மயிலாடுதுறை அருகே வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு வழிபாடாக நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 508 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். மயிலாடுதுறை அடுத்த கழுக்கானிமுட்டம் ஸ்ரீ மஹா பஞ்சமி வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு வழிபாடாக நடைபெற்ற ஏராளமான பெண்கள் பல்வேறு வேண்டுதல்களுடன் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆடி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.