உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியா? - கருணாநிதி பாணியில் முதலமைச்சர் ஸ்டாலின் நச் பதில்!


உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது; ஆனால் பழுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். “உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை” என பதிலளித்தார். 


கரூர் தேர் வீதிமாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை தங்க தேரோட்டம்


கரூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  ஆடி அமாவாசையை முன்னிட்டு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்க தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக தங்க ரத வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாரியம்மன் தங்க தேரோட்டம் ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அமாவாசை தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய முழுவதும் வரிசையில் நின்று தங்க தேரோட்ட நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.


சுயதொழில்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட முடியும் - என்சிடிஎஃப் தலைவர்


வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தேசிய கல்வி தொழில்நுட்பக் கழகத்தின் (என்சிடிஎஃப்) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ”நாட்டில் சுயதொழிலுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயதொழில்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட முடிவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடவும் முடியும். எனவே, மாணவர்கள் அதிகளவில் சுயதொழில் தொடங்க ஆர்வம்காட்ட வேண்டும். அத்துடன், மாணவர்கள் எப்போதும் கற்பதை நிறுத்திவிடக்கூடாது.” என்று தெரிவித்தார். 


சென்னையில் திடீரென முளைத்த "zero is good" அறிவிப்பு பலகைகள்..வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..


 சென்னை முழுவதும் பல்வேறு சாலைகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூதன முறையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பு பலகையில் ஜீரோ இஸ் குட் ( Zero is Good ) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகை என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Chembarambakkam lake: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு.. நிலவரம் என்ன ?


செம்பரம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதுசென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி தனது 24 அடியில் 14.50 அடி நீரை கொண்டுள்ளது. ஏரியில் தற்பொழுது 1.4 டிஎம்சி நீர் கையெழுப்பு உள்ளது. ஏரியிலிருந்து குடிநீர், சிப்காட் உள்ளிட்ட தேவைக்காக சுமார் 149 கன அடி வெளியேறிக் கொண்டிருக்கிறது