• புதுச்சேரியில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் இன்று உரையாற்றும் நிலையில், கூட்டத்திற்கு ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு டோக்கனுடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு டோக்கனுக்கு 2 பேர் என நிர்வாகிகள் கூறிய நிலையில், ஒருவரை மட்டுமே அனுமதிக்க முடியும் என காவல்துறை திட்டவட்டம்.
  • புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்ட மைதானத்திற்குள் நுழைய தொண்டர்கள் முண்டியடித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான தொண்டர்கள் வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
  • பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ மீண்டும் கொண்டு வரும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் ஓபிஎஸ்-ஐ அவர் சந்தித்த நிலையில், நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஒரு கிராம் ரூ.12,000-த்திற்கும், ஒரு சவரன் ரூ.96,000-த்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒன்றான புழல் ஏரி அதன் முழு கொள்ளளவான 3,300 மில்லியன் கனஅடியை எட்டியது. உபரிநீர் திறப்பு 100-லிருந்து 300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு 8-வது நாளாக தொடர்கிறது. சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி.
  • திருவள்ளூரில், 7-வது உலகக் கோப்பை கேரம் போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய பெண்ணிற்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்த அப்பகுதி மக்கள்.

 

Continues below advertisement

 

Continues below advertisement