- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொண்டர்கள் காலை முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூடி வருகின்றனர்.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 99,520க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து ரூ.12,440க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- நான் பிரதமர் மோடிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் விசுவாசமான நாய் என அண்ணாமலை கூறியுள்ளார். தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், பதவிக்காக ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை என விமர்சித்துள்ளார்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாணவனின் தந்தைக்கு அரசு வேலை பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
- கிறிஸ்துமஸ், புத்தாண்டி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசின் மீது சுமை கூடுவதைதான் நாம் இதில் கவனிக்க வேண்டும் என 100 நாள் வேலை திட்டம் மாற்றம் குறித்து கமல்ஹாசன் எம்.பி., கருத்து தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவின் வரி விதிப்பால் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய ஊர்களில் ஏற்றுமதி துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- திருவாரூர் அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Tamilnadu Roundup: ஈரோட்டில் விஜய்.. கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்.. 10 மணி செய்திகள் இதோ!
பேச்சி ஆவுடையப்பன் | 18 Dec 2025 10:00 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் டிசம்பர் 18ம் தேதியான இன்று காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு செய்திகள்
Published at: 18 Dec 2025 10:00 AM (IST)