- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது - மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான இரங்கல் தீர்மான உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு
- மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது - அண்ணாமலை தகவல்
- திமுக - விசிக: தொடர் பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று முதலமைச்சரை சந்திக்கும் திருமாவளவன்!
- உதயநிதி படத்தில் நடிக்கும் போதே பட்டியலின மக்கள் குறித்து பேசியுள்ளார் - அது போன்று உங்கள் படத்தில் ஏதாவது பேசி உள்ளீர்களா? என த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமைச்சர் பொன்முடி கேள்வி
- ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் 10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு - புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பள்ளியிலேயே புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன
- ஈரோட்டில் குடும்பத் தகராறில் 4 வயது மகனுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு
- சென்னை பனந்தோப்பு ரயில்வே காலனியில் அறிவழகன் என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்! ரவுடி அறிவழகன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது, அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
- சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
- திருவண்ணாமலை மண்சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் - நடிகர் ரஜினிகாந்த் வேதனை
- சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து, அவிநாசி யை அடுத்து வேலாயுதம்பாளையம் பைபாஸ் அருகே லாரி மீது மோதி விபத்து - 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்
- வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு குறைவு என தகவல்
- ராமேஸ்வரம் பாம்பன் கலங்கரை விளக்கம் 33 ஆண்டுகளுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி
- திருத்தணி அருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து வெடிக்கச் செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை முயற்சி
Tamilnadu RoundUp: முதலமைச்சரை சந்திக்கும் திருமா, நடிகர் ரஜினிகாந்த் வேதனை - தமிழ்நாட்டில் இதுவரை
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
09 Dec 2024 09:50 AM (IST)
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு
NEXT
PREV
Published at:
09 Dec 2024 09:50 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -