Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu RoundUp 7th January 2025: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Continues below advertisement

எச்.எம்.பி.வி. வைரஸ் பரவி வரும் நிலையில் அந்த வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அச்சப்பட வேண்டாம் - மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

Continues below advertisement

எச்.எம்.பி.வி. வைரஸ் அச்சுறுத்தல்; பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அரசு அறிவுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை அருகே உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை அகற்றக்கோரி மனித சங்கிலி போராட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் கொண்டாட்டம்


விண்வெளியில் இன்று நடைபெறுவதாக இருந்த இரண்டு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஸ்பேஸ் டாக்கிங் பணி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு 


பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதி; தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

அண்டார்டிகாவின் வின்சென்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்விக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - நெல்லை இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அதிகளவு காற்றாலைகளை ஏற்றுமதி செய்து புதிய சாதனை

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் கடையடைப்பு போராட்டம்

அரசியல் கேள்விகள் ஏதும் தன்னிடம் கேட்க வேண்டாம் - சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த்

பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக கரும்புகள் வெட்டும் பணிகள் தொடக்கம்; இன்று முதல் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் சர்வதேச பலூன் திருவிழா

Continues below advertisement