• மழை குறித்து அவதூறு பரப்பி மலிவான அரசியலை சிலர் செய்துவருகின்றனர் என்றும் மக்கள் திமுக அரசை பாரட்டுவதால் எதிர்க்கட்சிகளுக்கு வயிறெரிச்சல் என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம். 
  • சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் பரிதாபதாக உயிரிழந்தார்.
  • சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை மீண்டும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. 
  • தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
  • பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. 
  • கஞ்சா வியாபரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் புழல் சிறையில் அடைப்பு
  • கொடைக்கானலில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  • கடலூரில் இரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பு
  • 7 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மரக்காணம் பகுதி மீனவர்கள்.
  • திருவண்ணாமலை செண்பகத்தோப்பு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
  • சென்னை பல்லாவரம் பகுதியில் கழிவு கலந்த குடிநீரை குடித்ததால் 30 பேர் பாதிப்படைந்து குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதி. 
  • கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைப்பு தமிழக அரசு டெண்டர் கோரியது.
  • நடிகர் சிவகார்த்திக்கேயன் மழை வெள்ள பாதிப்பு  நிவாரண பணிகளுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
  • பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் நாளை நியாய விலைக்கடைகள் இயங்கும்.
  • தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட ஐந்து வடமாநிலத்தவர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளத்து.