- மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு – விநாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது – பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
- ஃபெஞ்சல் புயல் காரணமாக 408 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது – நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரத்தில் பல பகுதிகளில் இன்னும் சீராகாத மின்விநியோகம்
- ஃபெஞ்சல் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு தண்ணீர் வடிந்த பகுதியில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது
- கார்த்திகைத் தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று கொடியேற்றம் நடந்தது – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
- செங்கம் பகுதியில் கட்டிய 3 மாதத்திலே உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி
- கஞ்சா விற்பனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
- சென்னையில் இன்று காலை பல இடங்களிலும் பனி மூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி
- விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் பல மாவட்டங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் குவிகிறது
- வேலூரில் லாரி மீது ஜீப் மோதியில் 3 பேர் பரிதாப மரணம் – அப்பளம் போல நொறுங்கிய ஜீப்
- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்துக்கு தடை
- தொடர் நீர்வரத்து; ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை
- கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை – தொடர் மழையால் மக்கள் அவதி
- எடப்பாடி பழனிசாமியில் 7 பாலங்கள் கட்டு உடனே இடிந்தது வரலாறு – அமைச்சர் எ.வ.வேலு
Tamilnadu Roundup: கடலூர், விழுப்புரத்தில் தொடரும் மின்தடை! புதுச்சேரியில் ஃபெஞ்சலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!
சுகுமாறன்
Updated at:
04 Dec 2024 10:17 AM (IST)
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
04 Dec 2024 10:17 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -