• தமிழ்நாடு அரசியல் களம் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளதால், கூட்டணியில் சலசலப்பு உருவாகும் வகையில் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.
  • சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழை. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ மழை பதிவு. மேகவெடிப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்.
  • சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் 4 விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்ட நிலையில், 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமதித்து தாமதமாக தரையிறங்கின.
  • சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1,519 விநாயகர் சிலைகள், இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. இதற்காக 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
  • திண்டுக்கல் வேடசந்தூரில் நேற்றிரவு விநாயகர் சிலை ஊர்வலத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்தனர். போலீசார் தலையிட்டு ஊர்வலத்தை சீர் செய்தனர்.
  • விக்கிரவாண்டி உள்பட தமிழ்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு. 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமல்.
  • யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.