• சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது

  • தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

  • பாம்பன் புதிய பாலம் தரம் குறைவாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் - ரயில்வே பாதுகாப்பு ஆணையரே குறை கூறியுள்ளதால் புதிய பாலத்தில் ரயில் இயக்குவதை ஒத்திவைக்கக் கோரிக்கை

  • தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை

  • அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது!

  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை - 5000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைதாகி சிறையில் இருக்கும் 27 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்

  • தமிழ்நாட்டில், முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்வு - ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனை

  • கோவை: நொய்யல் ஆற்றில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்த காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழப்பு

  • காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

  • குரூப் 4 பதவிக்கான கலந்தாய்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

  • மதுரை கோரிபாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுவரும் இணைப்பு பாலத்துக்காக அமைக்கப்பட்ட இரும்பு பாரம் தாங்காமல் திடீரென இரும்பு சாரம் சரிந்து விழுந்த விபத்தில் 4 ஊழியர்கள் படுகாயம்

  • கள்ளக்குறிச்சி மாடூர் சுங்கச்சாவடியில் தாங்கள் சென்ற வாகனத்திற்கு சுங்க கட்டணம் வசூலித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதகவினர் சாலை மறியல்

  • கிருஷ்ணகிரியில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா சிலை மீது காலனி வீசிய நபர் - தி.மு.கவினர் விரட்டியதால் நீதிமன்றத்தில் தஞ்சம்

  • மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு போலீசார் திடீர் ஆய்வு - உரிமம் பெறாத பாரை மூடி சீல் வைத்து 2 பேர் கைது