- போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். இரைப்பை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், ஆய்வுக்காக மருந்துகளை எடுத்துச் சென்றனர்.
- நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீன்பிடி வலைகள், தளவாடப் பொருட்கள், பிடித்த மீன்களை பறித்துச் சென்று அட்டூழியம்.
- திருவள்ளூர் பேரம்பாக்கம் அருகே இருளஞ்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி. பழிக்குப் பழியாக கொலை நடந்ததாக தகவல்.
- செங்கல்பட்டு வல்லம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 18,290 கனஅடியாக அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 112.73 அடியாக உள்ள நிலையில், பாசனத்திற்காக 20,000 கனஅடி நீர் திறப்பு.
- தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவி நயினார் அணை 132 அடி கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மதுபோதையில் நடனமாடி, பெண் பக்தர்கள் மீது விபூதி அடித்து விளையாடி வீடியோ வெளியிட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் தற்காலிக அர்ச்சகர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது.
- கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலா வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.