விழுப்புரம்: 

Continues below advertisement

 

 

Continues below advertisement

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர், அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் தீரன், சமூக நீதி பேரவை தலைவர் கோபு, சேலம் மேற்கு எம் எல் ஏ அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தபோது.. பூம்புகார் மகளிர் மாநாடு தொடர்பாக மாவட்ட மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை தொடர்பான கூட்டம் நடைபெறுவதாகவும், மாநாடு தான் முக்கியம் ஐயா சொல்வது தான் முடிவு ஐயா என்ன சொல்கிறார் அதை தான் செய்யப் போகிறோம் என்றும் அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ராமதாசை பார்க்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என கூறினார்.

பாமகவில் அன்புமணி ராமதாசுக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் உள்ள பிரச்சனையில் கட்சி நிர்வாகிகள் மன வேதனையில் இருப்பதாகவும், சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படவில்லை இதய பிரச்சனை காரணமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அய்யா மருத்துவர் ராமதாஸ் தன்னை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாகவும், ஆனால் அன்புமணி ராமதாஸ் உடல் நலம் குறித்து கேட்கவில்லை இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளதாக கூறினார்.

உடல் நலம்தேறி வர கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென அன்புமனி ராமதாசு தெரிவித்தற்கு பதிலளித்து பேசிய அருள் கூட்டு பிரார்த்தனை இறந்தவர்களுக்கு தான் செய்வார்கள் தான் உடல் நலத்துடன் உயிரோட இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் என மருத்துவமனையில் சேரவில்லை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தான் இருதய பரிசோதனைக்காக சேர்ந்தேன் அங்கு என்னுடைய மருத்துவ பரிசோதனை குறிப்புகள் உள்ளது. யார் வேணாலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து தன்னிடம் பேசிக் கொண்டுதான் இருப்பதாகவும்

இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுதான் இரண்டரை கோடி வன்னியர்களின் ஆசை மேலும் தேர்தலை நோக்கி எங்களின் வெற்றி பயணம் வேகமெடுக்க வேண்டும் விரைவில் நடக்கும் என பாமக எம் எல் ஏ அருள் தெரிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில் “எம்.எல்.ஏ அருள் எனக்கு துணையாக, என்னோடு தான் பயணிக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக் கூடிய மாநில தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள்,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனவே, ஏற்கனவே பாமகவில் குழப்பங்கள் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், இது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக க. சரவணன் என்பவரை நியமனம் செய்து அருளை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளராக தக. சரவணன்  அவர்கள் இன்று (25.06.2025 புதன்கிழமை முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு சேலம் வடக்கு. சேலம் தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள, பாட்டாளி மக்கள் கட்சியின், அனைத்து நிலை நிர்வாகிகளும், முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவித்துள்ளனர். இதனையடுத்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்.,   என்னை பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என கோபத்துடன் தெரிவித்தார்.