Tamilnadu roundup: மும்பையை பந்தாடிய சென்னை... முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் கைது- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
Continues below advertisement

தமிழ்நாடு செய்திகள்,
Source : ABP Live
- சென்னையில் பயணியை கை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய ரேபிடோ ஓட்டுநர் கிதியோன் கைது
- புதுச்சேரியில் சிபிஐ சோதனை: அதிமுக முன்னாள் அமைச்சரின் அண்ணன் மகன் கைது!
- நெல்லை மாவட்டம் அகஸ்த்தியர் அருவியில் குளிக்க, சுற்றுலா செல்ல பொது மக்களுக்கு அனுமதி
- தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (மார்ச் 24) அனைத்துக் கட்சிளுடன் ஆலோசனை
- சென்னை சேப்பாக்கத்தில் வரும் 28ஆம் தேதி CSK vs RCB அணிகள் மோதுகின்றன; இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச்.25) நடைபெறும் என அறிவிப்பு
- மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
- திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை - அண்ணாமலை
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.65,720க்கு விற்பனை
- பைக்கில் அதிவேகமாக சென்றதில் கட்டுப்பாட்டை இழந்து மெட்ரோ தூணில் மோதி, தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 749 கன அடியாக அதிகரிப்பு
- தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி
- மதுரை தனிப்படை காவலர் கொலை வழக்கு… குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.