• நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு.

  • வட உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல்.

  • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.40 குறைந்த நிலையில் ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-த்திற்கும் விற்பனை.

  • தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30.2 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடியில் 4-வது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்.

  • தருமபுரி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 15-ம் தேதி பள்ளிகள் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு.

  • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை.

  • விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 8-வது நாளாக, ஐந்தருவியை தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க தடை தொடர்கிறது.

  • தொடர் மழையால், தமிழ்நாடு முழுவதும் 15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 

Continues below advertisement