• தமிழகத்தில் ஆமை வேகத்தில் அந்நிய முதலீடுகள் இருப்பதாகவும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
  • மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என்றும், அண்ணா, பெரியாரை விமர்சித்த மேடையில் அதிமுகவினர் அமர்ந்தது அவர்களது அடிமைத்தனத்தை காட்டுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
  • கடவுளின் பெயரால் கட்சியினர் மாநாடு நடத்துவதே தவறு என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம்.
  • கோயில்களில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் என மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • கிருஷ்ணகிரி கீழ்புதூரில், தவெக தலைவர்விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அக்கட்சி நிர்வாகிகள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதால் பரபரப்பு.
  • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • சென்னை கிண்டியை சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்த்தேக்கங்கள் அமைத்து வெள்ள பாதிப்புகளை தடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.9,230-க்கும், ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனை.
  • தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமா மேலும் ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு.
  • ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட இடைவெளியால் 3-வது நாளாக போக்குவரத்திற்கு தடை. மாற்று வழியில் தடுப்புச் சுவர் அகற்றப்பட்டு புதிய ஏற்பாடு.