தமிழ்நாடு முழுவதும் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்; நேற்று இரவு மழை பெய்யாததால் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டம்
சென்னை, தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையால் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு
சென்னையில் நேற்று இரவு பல இடங்களிலும் புகைமண்டலமாக காட்சி - வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் இன்று அதிகாலை பல இடங்களிலும் கனமழை - தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்ப்பு
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; அடுத்த 2 நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிப்பு
தமிழ்நாட்டில் இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு
ஒகேனக்கல், மேட்டூருக்கு இன்று நீர்வரத்து அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வெளியேற்றம்
தொடர் மழையால் மதுரை மாவட்டம் வைகை அணை முழு கொள்ளவை எட்டியது - மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்த 14 ஆயிரம் கோடியை திமுக அரசு பயன்படுத்தவில்லை - முன்னாள் ஆளுநர் தமிழிசை கருத்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, திரையரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூடி மகிழ்ச்சி
தொடர் மழை காரணமாகவும், மண் சரிவு காரணமாகவும் உதகை ரயில் சேவை ரத்து
பண்ருட்டியில் பட்டாசு வெடிப்பதில் தகராறு: ஒருவர் இரும்பு ராடால் அடித்துக்கொலை