• சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து. மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமூகநீதியில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பது நம் கடமை என்றும் பாராட்டு.
  • பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்துக்கு அசாம் போலீசார் சம்மன் அனுப்பியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம். பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவதாக விமர்சனம்.
  • அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,440-க்கும், ஒரு கிராம் ரூ.9,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • சென்னையில் நேற்று பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது போலீசார் வழக்குப் பதிவு.
  • மதுரையில் நாளை நடைபெற உள்ள தவெக 2-வத மாநில மாநாட்டிற்கு, 10 மாவட்ட எஸ்பி-க்கள், 2 காவல் ஆணையர்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு.
  • கோவில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
  • திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில், 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை என தகவல்.
  • சேலம் மேட்டூர் அணை, நடப்பாண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. நீர் திறப்பு 90,500 கனஅடியாக உள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள  அபாய எச்சரிக்கை.
  • தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.