• தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
  • கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்து அரசியல் செய்ய வரவில்லைமக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைக்கிறோம்; அதனால்தான் எங்களுக்கு யாரும் போட்டியில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
  • ”2001-ல் 50 லட்ச ரூபாய் கடனில் இருந்த திமுக அமைச்சர், இன்று 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார்” - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடித்துவரும் 'வாரணாசி' படத்தின் வீடியோ வெளியீடு. 
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்;கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு 17 நாட்களுக்கு அரசு விடுமுறை மற்றும் 39 நாட்கள் வரையறைக்கப்பட்ட விடுமுறைகள் என அரசாணை வெளியீடு 
  • தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்த கொரிய நிறுவனம், ஆந்திராவுக்கு செல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
  • தமிழகத்தில் 5 கோடியே 90 லட்சம் S.I.R படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்
  • தமிழகத்தில் தள்ளுவண்டி உணவு கடைகள் உரிமம் பெறுவது கட்டாயம்; உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கட்டணமில்லா உரிமம் வழங்கப்படும் என அறிவிப்பு
  • புதுச்சேரியில் நாளை (நவ.17), நாளை மறுநாள் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடுமென வானிலை மையம் எச்சரிக்கை