- பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது சட்டப்பேரவை. கரூர் சம்பவம், இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு.
- கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்.
- பாமக சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே. மணியை நீக்குவது தொடர்பாக அளிக்கப்பட்ட மனு குறித்து கேட்டறிய, சபாநாயகர் அப்பாவு உடன் பாமக அன்புமணி தரப்பு சந்திப்பு.
- கரூர் சம்பவத்திற்குப் பின் தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் தவெக தலைவர் விஜய்யுடன் சந்திப்பு.
- கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு, வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,960 உயர்ந்து, ஒரு சவரன் 94,600-க்கும், ஒரு கிராம் ரூ.11,825-க்கும் விற்பனை. வெள்ளி விலையும் அதிடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.206-க்கு விற்பனை.
- சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோ வழக்கில் கைது.
- சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
- தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிப்பு.
- தேனி சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு. 126 அடி கொள்ளளவு கொண்ட அணையில், 76 அடியாக இருந்த நீரின் அளவு 86 அடியாக அதிகரிப்பு.