- சென்னையில் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக பொதுமக்கள் கடும் அவதி
- சென்னையில் நேற்று இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த சில நாட்கள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு
- சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பெருங்குடியில் 7 செ.மீட்டர் மழை பதிவு
- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
- கொடைக்கானலில் 12 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுலா பேருந்துகளுக்கு தடை – 18ம் தேதி முதல் அமல்படுத்த முடிவு
- நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
- தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த வேகத்தில் வருகிறது
- மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது; தமிழக மக்களும், தமிழும்தான் பிரதமர் மோடியின் பரம எதிரிகள் – முன்னாள் அமைச்சர் பொன்னையன்
- மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் விவசாயிகள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
- கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்ற வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி பாராட்டு
- உளுந்தூர்பேட்டை அருகே கொல்லம் ரயிலின் இன்ஜின் பழுது – 1 மணி நேரம் தாமதமாக வந்த 3 ரயில்கள்
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; திருச்செந்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர் கைது
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- தெலுங்கர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு; நடிகை கஸ்தூரியை பிடிக்கத் தனிப்படை அமைப்பு
- அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அனைத்து காலத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு தருவது தி.மு.க. – எடப்பாடிக்கு தி.மு.க. பதில்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு; மேலும் 90 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க திருமா திட்டம்
Tamilnadu RoundUp: சென்னையில் விடாமல் பெய்யும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியில் தொடரப்போகும் மழை!
சுகுமாறன்
Updated at:
12 Nov 2024 09:32 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
12 Nov 2024 09:32 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -