Tamilnadu Rounudp: அதிமுக வழக்கில் இன்று தீர்ப்பு, ஓபிஎஸ்-க்கு எதிராக நடவடிக்கை - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Continues below advertisement
  • சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
  • அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
  • தேனியில் பஞ்சமி நிலத்தை ஓ.பன்னீர்செல்வம் வாங்கியது உறுதி. பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்ட எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
  • தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து இருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
  • தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக முதல்வர் சொல்வது பச்சை பொய்.. கையெழுத்து போட்டீர்களா இல்லையா..? அன்பில் மகேஷுக்கு அண்ணாமலை கேள்வி

  • முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு
  • சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலினை அருகில் கண்டு மகிழ்ந்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது
  • சென்னை திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிப்பு - விசாரணைக்குப் பிறகு நீதிபதியின் உத்தரவுப்படி சிறுவனை பெற்றோருடன் போலீசார் அனுப்பிவைப்பு
  • மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே  அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்
  • திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டு தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.
  • உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை
  • சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  • தை பௌர்னமியை முன்னிட்டு சதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
  • விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தி பகுதியில் பிப்.5ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
Continues below advertisement