- சென்னை ஐ.எசி.எப் தொழிற்சாலையில் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளை மத்தியப் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்
- பெரியார் பற்றி அவதூறு கருத்துக்களை பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு.
- காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு எற்ப்பட்டது.
- சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
- பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவிப்பு
- 'அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள்' - அமைச்சர் துரைமுருகன்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
- தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று பனையூரில் நடைபெறுகிறது!
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும் என்று அறிவிப்பு
- சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் நாளை இயக்கம். முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
Tamilnadu Roundup: சீமான் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு.. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - பர பர 10 மணி செய்திகள்
ஜேம்ஸ்
Updated at:
10 Jan 2025 10:04 AM (IST)
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
10 Jan 2025 10:02 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -