முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ







  • TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ள , மகளிர் தின வாழ்த்து பதிவில், “ திமுக மகளிரை ஏமாற்றும் என நினைக்கவில்லை எனவும் , திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


விஜய் பேசும் வீடியோ: 







  • மகளிர் தினத்தை ஒட்டி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  'Pink Auto' திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ வழங்கப்படவுள்ளது. வர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


  • இன்று லண்டனில் நடைபெறுகிறது இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி




  • பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி  படைக்கிறது; சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை, எனது பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.



  • பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக, நேற்று பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், யாரும் தவம் கிடக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்

  • தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்ட பிரச்னைகளைல் மத்திய அரசை கண்டித்து வரும் மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்  என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

  • தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு வந்த கப்பலில்  சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

  • மகளிரி தினமான இன்று, தனது சமூக வளைதள பக்கத்தை ,  ஒரு நாள் பெண்கள் கையாளுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைசாலியும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.