தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களின் விவரங்களை கீழே விரிவாக காணலாம்


ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள்:


ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியா ஆர் அனாமிகா நியமிக்கப்பட்டுள்ளார்.


நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக எஸ்.ஆர்.கவுசிக் நியமிக்கப்பட்டுள்ளார். 


மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக அப்தாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ளார்.


தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக  கவ்ரவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக ஸ்வேதா நியமிக்கப்பட்டுள்ளார். 


13 சார் பதிவாளர்கள் நியமனம்:


மேலும், 13 ஐ.ஏ.எஸ். அதிகாரி சார் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சார் ஆட்சியாளராக வி.எஸ்.நாராயண ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் மேட்டூர் சார் பதிவாளர் ஆர் பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை மாவட்ட பொள்ளாச்சி சார் பதிவாளராக கேத்ரின் சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்ட ஒசூர் சார் பதிவாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.


திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவி சார் பதிவாளராக அர்பித் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.


திருவண்ணாமலை மாவட்ட செய்யாறு சார் பதிவாளராக பல்லவி வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.


பெரம்பலூர் சார் பதிவாளராக எஸ்.கோகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.


நாகை சார் பதிவாளராக குணால் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


பரமக்குடி சார் பதிவாளராக அபிலாஷா கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க: IPS Transfer : திண்டுக்கல், கள்ளக்குறிச்சிக்கு புது எஸ்.பி.க்கள் நியமனம்! காவல்துறை உயரதிகாரிகள் அதிரடி மாற்றம்!


மேலும் படிக்க: TN CM Stalin: நிரந்தர நிவாரணமாக ரூ. 12,659 கோடி தேவை : மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..