உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக இதுவரை இந்தியாவில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உலகம் முழுவதும் புத்தாண்டு பிறக்க உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்றில் இருந்து மீண்ட உலகம், தற்போது ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், 2022வது புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, ஒமிக்ரான் பாதிப்பு குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.