தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு அரசின் திட்டப்பணிகளை துவக்கி வைக்க திண்டுக்கல் சென்று இருந்தார். திண்டுக்கலில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் சுமார் 285 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அந்த அரசு விழாவில் அவருடன் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் இந்த விழாவிற்கு வந்த முதலமைச்சரை பார்க்க காவல்துறையினர் தன்னை அனுமதிக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பால பாரதி தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஒன்றில் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர், “திண்டுக்கலுக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க எவ்வளவு முயற்சி செய்தும் பார்க்க முடியவில்லை. டாணாக்காரர்கள் நடத்திய நாடகம் சுவாரஸ்யமானது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவரம் அறிந்த பிறகு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போனில்தொடர்புகொண்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கியது.நன்றியும்வாழ்த்துகளும்..” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்