தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இறுதி வாக்காளர்கள் பட்டியல் வரும் அடுத்தாண்டு ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் எ்றும், தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் 3.10 கோடி பேரும், ஆண் வாக்காளர்கள் 3 கோடி பேரும் உள்ளனர் என்றும் கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “


தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். 8 ஆயிரம் பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஜனவரி மாதம் 18 வயது தொடங்கும் நபர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.


3 கோடி ஆண் வாக்காளர்கள், 3.10 கோடி பெண் வாக்காளர்கள். 17 வயதுக்கு மேல் இருந்தாலும் கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தெரிவித்து இருக்கிறோம். அனைத்து இளைஞர்களும் இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை இடம் பெற செய்ய வேண்டும்.


அதிக வாக்காளர்கள் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர்  தொகுதி 6.52 ஆயிரம் பேர் உள்ளனர். குறைவான வாக்காளர்கள் கீழ் வேலூர் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டம் 1.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.


அனைத்து பள்ளி கல்லூரிகளில் முகங்கள் நடத்தி 18 வயது நிரம்பியவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய இருக்கிறோம்.


40-49 வயதில் தான் அதிகபடியான வாக்காளர் உள்ளனர். சுமார் 1.37 கோடி உள்ளனர். அதில் 67.92 லட்சம் – ஆண்கள், 69.69 லட்சம் – பெண்கள் ஆவர். Voter help mobile app மூலம் கூட வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். 2019 ஆண்டு 68,036 வாக்குச்சாவடி மையம் இருந்தது. இந்த ஆண்டு 68,144 வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது” என குறிபிட்டுள்ளார்.