நெய்வேலி நிலக்கரி ஆலையில் அன்மையில் எக்ஸ்கியூட்டிங் ட்ரெயினிங் என்ற பணிக்கு சுமார் 300 காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் GATE தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 


இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நெய்வேலி நிலக்கரி ஆலை தன்னுடைய நிலப்பரப்பளவை அதிகரிக்க அப்பகுதி மக்கள் தங்களுடைய நிலத்தை கொடுத்து பெரியளவில் உதவி அளித்துள்ளனர். அப்படி நாட்டின் வளர்ச்சி மற்றும் எரிசக்தி தேவைக்காக நிலம் அளித்த மக்கள் தங்களுக்கு அதன்மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பை ஒரு பயனாக கருதினர். இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக பல முறை உள்ளூர் மக்களை சிலர் தூண்டி போராட்டம் நடத்த செய்துள்ளனர்.


 






நெய்வேலி நிலக்கரி ஆலையில் உள்ளூர் மக்கள் எவ்வளவு சதவிகிதம் வேலை செய்கின்றனர் என்பது தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை. இதனால் பலரும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் புதிதாக எடுக்கப்படும் பணியாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் இந்தத் தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து அனைவரும் பங்கேற்கின்றனர். அதில் மற்ற நபர், உள்ளூர் மக்கள் இடையே எந்தவித வேறுபாடும்  இல்லாமல் உள்ளது.


நெய்வேலி நிலக்கரி ஆலைக்காக தங்களுடைய நிலத்தை கொடுத்து உதவிய உள்ளூர் மக்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் இடஒதுக்கீடு செய்ய வேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான சமூகநீதியாகும்.  சமூகநீதியை தாரக மந்திரமாக கடைபிடிக்கும் பிரதமர் மோடியின் அரசும் தங்களும் இந்த விஷயம் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண