தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி இருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஆளுநரின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா தடை செய்ய வேண்டிய இயக்கம் என ஆளுநர் மட்டுமல்ல பலதுறை சார்ந்த வல்லுநர்களும் கூறியுள்ளனர்.
குறிப்பாக கேரளா, பாலக்காடு, ஆழப்புலா என கடந்த 2 ஆண்டுகளில் நடந்த 66 கொலைகள் சமீபத்தில் நடந்த 2 முக்கிய கொலைகள் என பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா சம்பந்தப்பட்டு உள்ளது. தமிழக கவர்னர் பேசியது அவரின் உளவுத்துறை அறிவில் பேசி உள்ளார். அவர் 35 ஆண்டுகால உளவுத்துறை அனுபவம் மிக்கவர். உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஆளுநர் அவ்வாறு பேசி உள்ளார். இதனை அரசியல் ஆக்க கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியாது என நிதியமையச்சர் பேசியிருப்பது திமுக தேர்தல் வாக்குறுதியின் மற்றொரு பொய் எனவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கருத்தும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்