தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி இன்று தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் ஆளுநர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கிறார். 


ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைத்தால், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்திருப்பதாகவும், மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாகவும் அவரது உரையில் குறிப்பிட்டிருந்தார். மாநில சுய உரிமை குறித்த ஆளுநரின் இப்படியான கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 



 ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி இந்திய குடிமைப்பணி குரூப்‌ 1 தேர்வுகளுக்கு தயாராகும்‌ மாணவ-மாணவியருடன்‌ சென்னை ராஜ்‌ பவனில்‌ உள்ள தர்பார்‌ அரங்கில்‌ கலந்துரையாடினார்‌.


இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், பொதுவெளியில் இப்படி நிர்வாக விசயங்களில் தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் அலட்சியமாக கருத்துக்களை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் எனவும் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் பேச்சிற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.


மேலும், ஆளுநரின் இதுபோன்ற செயல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் சட்டமன்ற மாண்பை குறைக்கும் வகையில் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் தன்னுடைய கருத்தை திரும்ப பெறுவதே அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு உண்மையாக நடந்துகொள்வதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.


இந்நிலையில், ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக சட்டமன்ற கூட்டத்தில் தனித்தீர்மான கொண்டுவர இருக்கிறார்கள். 




மேலும் வாசிக்க. 


Sellur Raju: 'ஆண்டவனே கேட்டாலும் தப்புதான்.. அண்ணாமலை எல்லாம் என்ன..?' கொந்தளித்த செல்லூர் ராஜூ - என்ன காரணம்..?


தமிழக வேளாண் அமைச்சர் என்.எல்.சி.க்காக விவசாயிகளை மிரட்டுகிறார் - அன்புமணி குற்றச்சாட்டு