Sub Inspector Recruitment: இளைஞர்களே.. 621 காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்கள்...! விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 621 சப் இன்ஸ்பெக்டர் காலிபணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 621 சப் இன்ஸ்பெக்டர் காலிபணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

காவல் உதவி ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 621

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :01-06-2-2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01-06-2023

வயதுத் தகுதி: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

TNUSRB SI ஆட்சேர்ப்பு 2023 ஆனது சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா), சப் இன்ஸ்பெக்டர் (ஆயுத ரிசர்வ்) மற்றும் சப் இன்ஸ்பெக்டர் (தமிழ்நாடு சிறப்பு போலீஸ்) ஆகிய காலியிடங்களை உள்ளடக்கியது. 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்  tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  தகுதி, சம்பளம், தேர்வு செய்யும் முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அதிகாரபூர்வ இணையத்தில் பார்க்கலாம்.

தேர்வுத் தயாரிப்பிற்காக TNUSRB SI ஆட்சேர்ப்பு 2023 பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ TNUSRB இணையதளத்துடன் இணைந்திருங்கள் .

Continues below advertisement