2026ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் தனது முதல் சுற்றுப்பயணத்தைச் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். இதற்கன ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சுற்றுப் பயணமானது திருச்சி, அரியலூர் ,மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி ஒரு நாளைக்கு மூன்று அல்லது 2 மாவட்டங்களில் பத்து வாரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டார்.
விஜய் பிரச்சார பயணம்
முன்னதாக பிரச்சார பயணத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி மாநகர காவல ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார்.இதற்குக் காவல்துறை தரப்பில் சுமார் 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக ரோட் ஷோ நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சார பயணத்திற்காக தவெக தலைவர் விஜய் நாளை காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார். காலை 10:30 மணி முதல் 11 மணி வரை திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன் மக்கள் மத்தியில் விஜய் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளார். குறிப்பாக இந்தப் பிரச்சாரக் குழுக் கூட்டத்தில் விஜய் 15 நிமிடங்கள் மட்டுமே பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் என்றும் பேசி வருகின்றனர். மக்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரேத்யக வாகனம் ஒன்றை தவெகவினர் வடிவமைத்துள்ளனர். அந்த வாகனத்தில் '’உங்கள் விஜய் நா வரேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த பரப்புரைக்கு மக்களுடன் விஜய் சந்திப்பு என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. இந்த வாகனத்தில் ரசிகர்கள், தொண்டர்கள் ஏறாத வகையில் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.