தமிழ்நாட்டில் பேருந்துகளில், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய விதிகளை சேர்த்து திருத்தப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
- பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது
- பெண்களை பார்த்து கூச்சலிடுதல் கூடாது
- பாலியல் ரீதியாக சைகை காட்ட கூடாது
- பெண்களை புகைப்படம் எடுக்க கூடாது
இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை, நடுத்துநர் எச்சரித்த பின், பேருந்துகளில் இருந்து இறக்கிவிடலாம். மேலும் நடத்துநர் எச்சரித்த பின்னரும், விதிகளை மீறும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Also Read: திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்