தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


13.04.2023 முதல் 16.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


17.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.


அதிகபட்ச வெப்பநிலை :


13.04.2023 மற்றும் 14.04.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை




தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மழை பதிவு எதுவுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட 2- 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழையின் அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒரு வாரமாக 100 – 102  டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் திருப்பூரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும் சேலம் – 39.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி – 39.2 டிகிரி செல்சியஸ், வேலூர் – 38.9 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ், கோவை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் கானல் நீர் தென்படுகிறது. வரும் நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.      


Annamalai On Punjab Attack: பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதலா? அண்ணாமலை இரங்கல் செய்தியால் குழப்பம்..


Tamil NewYear Wishes: மகிழ்ச்சியும், இன்பமும் பெருகவேண்டும்.. அரசியல் கட்சிகளின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..


Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் வெற்றி பெற அண்ணாமலையாரை தரிசித்த அமைச்சர் அசோக்