தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் அசானி புயல் தீவிரமடைந்து வருவதால், தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காரைக்கால் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது . இதை தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 






தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு வலுப்பெற்றதை அடுத்து, கடலூர், பாம்பன், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என கூறப்படுகிறது.






இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 - 3டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை,அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.