பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு


கரூர் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிட்கோவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் சின்ன வடுகபட்டி கிராம ஓடை மற்றும் பட்டா நிலத்தின் வழியாக சென்று ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில் உள்ள அமராவதி ஆற்றில் கலந்து செல்வதாக சின்ன வடுகப்பட்டி கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கழிவுநீர் வெளியேறும் இடத்தில் மண்ணைக் கொட்டி மூடி உள்ளனர். தகவல் அறிந்து சிட்கோ நிர்வாகம் ஜே.சி.பி வாகனம் மூலமாக கழிவுநீர் வெளியேறும் பகுதியை மூடிய மண்ணை, தோண்டுவதற்காக வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீரென்று போராட்டம் நடத்த துவங்கினர்.


 



 


கரூர் மாவட்டத்தில் மக்கள் திடீரென்று போராட்டம்


தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் பொழுது விவசாய நிலம் மற்றும்  நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி சிட்கோவில் உள்ள கழிவு நீரை திறந்து விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆடு, மாடுகள், மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து, சம்பவ இடத்தில் மண்மங்கலம் வட்டாட்சியர் ராதிகா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கிராம பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்த இடத்தை, பெங்களூர் வியாசராயர் மடத்து இடம் என்றும், ஆக்கிரமிப்புகளை மீட்பதாக கூறி அடியாட்களுடன் வந்து கம்பி வேலி அமைக்க வந்தவர்களை பள்ளி முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் பெங்களூர் வியாசராயர் மடத்தைச் சேர்ந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாசராயர் மடத்தைச்  சேர்ந்தவர்கள் அந்த இடத்தை மீட்க மடத்து நிர்வாகிகள், வழக்கறிஞர்கள்  வந்து இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க முயற்சித்தனர். இந்நிலையில் மைதானத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் கம்பி வேலி அமைக்க விடாமல் தடுத்தனர்.




 


திடீரென்று மடத்து நிர்வாகிகளுக்கு ஆதரவாக ஐந்துக்கு மேற்பட்ட கார் மற்றும் 10 இருசக்கர வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட அடியாட்கள் திடீரென்று உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது அறிந்த முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடி கம்பிவலி அமைக்க விடாமல் தடுத்து அவர்களை வெளியேறச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


வேறு வழி இல்லாமல் காரில் வந்தவர்கள்  வசமாக மாட்டிக் கொண்டோம் என்ற அறிந்து உடனடியாக காரிலும், இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டனர். சம்பவ இடத்திற்கு இடத்திற்கு வந்த லாலாப்பேட்டை காவல்துறையினர் இரு தரப்பினரையும்  அனுப்பி வைத்து நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுங்கள் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.